Thursday, October 7, 2010

நவராத்திரி சக்தி வழிபாட்டின் தத்துவம்


    நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது
என்பதுதான் அர்த்தம்.உலகம்அனைத்தும் சக்தி மயம் 
என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம்.
தேவியானவள் அனைத்து உருவத்திலும் எல்லா
இடங்களிலும் வியாபித்திருக்கிறாள் என்பதைக் 
குறிக்கும் விதமாகவே அனைத்துஉருவ 
பொம்மைகளையும் கொலுவாகவைத்து 
வணங்கும் கலாச்சாரம் காணப்படுகிறது.

    நவராத்திரி நாளான ஒன்பது இரவுகள் தனி 

சக்தியாகவிளங்கும் ஜகன்மாதா, பத்தாம் நாளன்று
ஈசுவரனை வணங்கி `சிவசக்தியாக' ஐக்கிய 
ரூபிணியாக - அர்த்தநாரீசுவரராகமாறுகிறாள் 
என்பதே இந்த பண்டிகையின் புராண வரலாறு.
    இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி 

தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, 
போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும்.

    மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா 
தேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் 
மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என 
லட்சுமி தேவியாகவும், நிறைவுறும் மூன்று 
தினங்களில் சரஸ்வதி,நரசிம்மீ, சாமுண்டி
என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து 
வணங்குகிறோம்.
    இந்த நாட்களில் நைவேத்யங்களைப் படைத்து

கலைக்குஆதாரமாகத்திகழும் கலைமகளை பாடி, ஆடி
பரவசமுடன் வணங்குவோருக்குகேட்டவரத்தை 
சக்தியானவள் கைமேல் நல்குவாள் என்பது ஐதீகம்.
  
    சக்தி வழிபாட்டின் மறுபெயர் நவராத்திரி. 
சக்தி என்றால் பெண் என்ற பொருள் உண்டு. 
நவராத்திரிதினங்களில் வீடுகளில் கொலு வைத்து
கொண்டாடப்படும் வழக்கம் பண்டைக்காலம் தொட்டு
தமிழகத்தில் இருந்து வந்துள்ளது. 
 

    கொலு வைத்து கொண்டாடும் இந்த 9 
நாட்களிலும் (நவ-ஒன்பது)சிறுமிகள் முதல்
வயது முதிர்ந்த பாட்டி வரைமாலை 6 மணி 
முதல் இரவு 9 மணி வரை பாட்டு, கோலாட்டம் 
உள்ளிட்ட தாங்கள் அறிந்து வைத்துள்ள
பாரம்பரிய கலைத்திறமைகளை புதுப்பித்துக்
கொள்வதுடன்மற்றவர்களுக்கும் கற்றுக் 
கொடுக்கிறார்கள்.கலைகளும் வளர்க்கப்படுகிறது. 

    கலைகளில் பிரதானமாக வாய்ப்பாட்டு, நடனம், 
புராணக் கதைகள்,சொற்பொழிவு போன்றவை 
இடம்பெறும். தவிர கொலு வைப்பதால்சிறுவர்
சிறுமிகள்உள்ளிட்டஇளைய சமுதாயத்தினர் 
மத்தியில் இயற்கையில்அமைந்துள்ள 
அழகுணர்ச்சியும் வெளிக்கொணர ஏதுவாகிறது. 
   பெண்களிடம் கொலு பொம்மைகள் 

அழகுப்படுத்தும் திறன் காரணமாகதன்னம்பிக்கை
ஏற்படுவதுடன் வயதானவர்களைமதிக்கும்
பண்பும் வளர்க்கப்படுகிறது. 
    கொலு வைக்கும் வழக்கம் உள்ள வீடுகளில் 

ஆண்டு தோறும் காலத்திற்கேற்றாற்போல் நவீன 
புதியபொம்மைகள் இடம் பெறும். மண்ணாலான 
பொம்மைகளைசெய்து பிழைப்பு நடத்தும் கைவினைக்
கலைஞர்களுக்கு வாழ்வளிப்பதாக இது அமைகிறது 
என்பதால் சிறு தொழிலை ஊக்குவித்த திருப்தியும் 
கொலுவால்ஏற்படுகிறதுஎன்றால் மிகையில்லை.
    இந்திய தட்பவெப்ப நிலைப்படி அக்டோபர், நவம்பர்

மாதங்கள் மழை, குளிர் காலம் என்பதால், இந்த
காலத்தில் குறிப்பாக பெண்களுக்கு புரதச் சத்து
தேவைப்படும். அந்த வகையில்நவராத்திரி நாட்களில்
விதவிதமான புரதச்சத்து நிறைந்தபயறு வகைகளை
உண்ணும் வகையில்முன்னோர் இந்த பண்டிகையை 
கொண்டாடி வந்துள்ளனர் என்பது மருத்துவரீதியிலும் 
நிறைவைத் தருகிறது. 
    ஒன்பது நாட்களிலும் 9 வகையான பயறு 

வகைகள்,பழங்களை அம்மனுக்கு பிரசாதங்களாக 
படைத்து, அவற்றைமற்றவர்களுக்கும்வழங்குவதை 
வழக்கமாகக்கொண்டுள்ளனர் பெண்கள். 
   புரட்டாசி மாதத்தில் உடல் சோர்வைத் தரக்கூடிய

நோய்க் காரணிகள்அதிகம்என்பதால் புரதச் சத்து
நிறைந்தபயறுகளை உண்பதற்கான 
ஒரு பண்டிகையாகவும் நவராத்திரிபண்டிகை 
திகழ்கிறது. கொலு வைத்துகொண்டாடும் இந்த
பண்டிகை விஞ்ஞான ரீதியாகவும் நன்மையைத்
தருகிறது எனலாம்.

    நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம்
உள்ளது. மனிதன்எவ்வகையிலேனும் தன்னை
உயர்த்திக் கொள்ளவேண்டும். ஆன்மரீதியாக மனிதன்
தம்மைபடிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் 
இறைவனில்கலக்க வேண்டும். இதுவே மனிதப் 
பிறப்பின்அடிப்படைதத்துவம். இதை விளக்கும்
பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள்
வைத்து அதில்பொம்மைகளை அடுக்கி 
வழிபடுகிறோம்.ஒன்பது படிகள்வைத்து ஒவ்வொரு
படியிலும் பின்வருமாறுபொம்மைகளைவைத்து 
வழிபட வேண்டும்.
 
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை 

உணர்த்தும்புல், செடி,கொடி போன்ற தாவர 
பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட

நத்தை,சங்கு போன்ற பொம்மைகள்
இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை

விளக்கும்கரையான், எறும்புபோன்ற பொம்மைகள
இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட

உயிர்களை விளக்கும்நண்டு, வண்டு பொம்மைகள்
இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால்

விலங்குகள்,பறவைகள், பொம்மைகள் இடம் 
பெற வேண்டும்.
 * ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த
மனிதர்களின்பொம்மைகள் இடம் பெற வேண்டும்.



* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட

மகரிஷிகளின்பொம்மைகள்இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள்

இடம்பெறவேண்டும்.நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத
தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள்
என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் 

என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான
சரஸ்வதி, லட்சுமி, பார்வதிஆகியோருடன் இருக்க
வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக
இருக்க வேண்டும்.
 
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று 

கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற 
தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் 
பொம்மைகள் வைக்க வேண்டும்.

   ஓம் சக்தி ....ஆதி சக்தி ...பராசக்தி...ஓம்


Thanks NET


No comments:

Post a Comment