Tuesday, August 24, 2010

மனதுக்குள்ளே காமத்தை அடக்கினால்தான் கடவுளை அடைய முடியுமா?.....

               காமம் ....
 மனிதனாகப்   பிறந்த  அனைத்து  உயிர்களும்  ஒவ்வொரு 
வகையில்இன்பம்  பெறத்  தவிக்கின்றனர்.
மது...    சூது ...  மண்ணாசை .... பெண்ணாசை   இன்னும் பல
உளவியல்ஆசைகள்.
ஒவ்வொன்றுமே   மனதை  துன்பப்படுத்துபவை .அதிலும்
காமத்தீ ...இருக்கிறதே  அப்பப்பா...
மனதுக்குள்  அந்த எண்ணம்  வந்துவிட்டால்  வேறு
வேலைகள்எதுவும்  செய்ய முடியாமை ...
வேறு  புதிய  சிந்தனைகள்  தோன்றாது.
உடலும்  வெப்பமடையும் .
முடிவு...
முறையற்ற  சிந்தனைகள் ,முறையற்ற  பாலுணர்வுகள் ...
தகாத  உறவு ... சுயஇன்பம் .... இன்னும்  பல...


          இது  எந்த வயதுவரை .....தெரியாது
என்னுடைய  எண்ணப்படி   சாகும்  வரை  காமம்  இருக்கும்.

தினசரிகளில்  இப்போது  தினமும்- காமம்  ஆட்சி  செய்யும 
சாமியார்களைப்  பற்றியும் பல முதியோர்கள்  பற்றியும்  
செய்திகள்  வருவதில்  இருந்தே  தெரியும் -
காமம்  நம்  வசப்பட்டது அல்ல...   

அதற்காக  மனிதனாகப் பிறந்த நாம்  எதையும்
இழக்க ...சிலநேரம்   மானத்தையும் , புகழையும்,
கௌரவத்தையும் இழக்கத்தயாராகி விட்டோம்.

பணஇழப்பு  நமக்கு  எப்போதுமே  பெரிதாகத்
தோன்றுவதில்லை.


காமத்தை  நாம் வசப்படுத்த  முடியாது .நாம்தான்
காமவசப்படமுடியும்அதேபோல
கடவுளையும்  நாம் வசப்படுத்த  இயலாது .....
கடவுள்தான்  அவர் பக்கம்  நம்மை இழுக்க  வேண்டும் ...
அதற்கு  நாம் தயாராக  வேண்டும்.                                                                                               எப்படி ....
மனதை  அடக்க  வேண்டும் ... ஆனால்,அதற்கான  வழி ...

    காம  நுகர்வின் போது  நம்  மூளையில் ஒரு சிறு
மின்னல் தோன்றுவது  உண்டு.இதை உறவின்
" உச்சநிலை " என்கிறோம்.
அதிகம் போனால்  பத்து  வினாடிகள்  இருக்கும்.

  ஆன்மீகத்தில் இதனை  "  சிற்றின்பம் " என்று 
குறிப்பிடுவர் .அப்படியானால் 
உண்மையான " பரவசநிலை " எப்படி  வரும்?

 பேரின்பம்  என்ற  பரவசநிலையை   உண்மையான
தியானத்தின்  மூலம் நாம்  அனுபவிக்க  முடியும் .

 இதை  எழுதும்போது  கூட  என்னால்  அனுபவித்துப் 
பார்த்து  உளப் பூரிப்போடு  எழுத  முடிகிறது .

  தியானம்  செய்ய   நல்லநேரம்  பார்க்க  வேண்டியதில்லை .
எதிரில்  சுவாமி படம்  தேவையில்லை.
தீபம்  எரிய    வேண்டியதில்லை 
வீடு ,  கோயில் , அலுவலகம்  எங்கும்
தியானம்  செய்யலாம் .

மனதுதான்  வேண்டும் . மனம்  தெளிவானால்
உண்மையான
தியானம்  கைகூடும்.

கடவுளையே  குருவாக  எண்ணி  மனதை 
அமைதிப் படுத்துங்கள்.கடவுளும்  கருணை  புரிவார்.
 சிந்தனை  தெளிவானால்  மனம்  தெளிவாகும்.
மனம் தெளிவானால்  தியானம்  தெளிவாகும் .


 தியானத்தின்  "உச்சநிலை " பத்து  வினாடியில்
முடியாது.தலையில்  ஆரம்பித்து  உள்ளங்கால் 
வரை  உணரமுடியும்.இந்த  "பரவச நிலை " யை 
மறுபடி  மறுபடி  நம்மால் தூண்ட முடியும்.
 மூளையின்  இருபக்கமும்  அதிர்வுகள்  பலமாக
இருக்கும். மூளையில்  ஆரம்பித்த  அதிர்வு  நமது
உடலை  புல்லரிக்க  வைக்கும். இந்த  மெய்சிலிர்ப்பு
அடங்காது, மறுபடி மறுபடி  தொடரும்.

நம்  மனம்  ஒருமித்து  இருக்குமானால் 
அரைமணி  முதல்  ஒருமணிநேரம்  வரை  இந்த
பரவநிலையை  நாம்  அனுபவிக்கலாம்.
இந்தப்  பரவநிலை  சத்தியமாகப்  "பேரின்பம்" தான். 


 இந்தப்  பேரின்பத்திற்குமுன்  காமம்  மிக  அல்ப 
விஷயம்தான்.ஒப்பீடு  இரண்டு  நிலையையும்
அறிந்தபின்பே  முடியும். 


 காமசுகம்  முடிந்தபின்  உடல் ,மனம்
சோர்வடைகிறது. ஆனால்,தியானத்தின்  மூலம்
  பரவநிலை  அடைந்தால்  உடல்,மனம் ,புத்தி 
முதலியன  தெளிவாகிறது.அந்த  நேரத்தில்
மனம், உடல்  பறப்பது  போன்ற  நிலை
ஏற்படுகிறது.உடற் சோர்வும்  மனச்  சோர்வும் 
அறவே  நீங்குகிறது.
காமம்  வேறு வழி ....  நம்மை  ஒரு வேலையும்
செய்யவிடாது.
தியானம்  வேறு வழி .... நம்மை  புத்துணர்ச்சி
அடையச்  செய்யும்.
காமம்....  நமது குற்றங்களுக்கு  வழி  வகுக்கும் .
 தியானம் ... கடவுளின்  அருகில்  நம்மை
இழுத்துச்  செல்லும் .
காமம் ... அதிகரித்தால்  நோய் ....!
தியானம் ...  உடலுக்கும் ,மனதிற்கும்  நல்ல மருந்து.

      எனினும், காமத்தை  சிவபெருமான்  தவிர
யாரும்  அடக்கியதாக தெரியவில்லை. சிவபெருமானுக்கும்
நெற்றிக்கண்  இல்லையென்றால் மன்மதனின்
மலர்க்கனைகள்  பாயும்போது , மன்மதனை  எரித்திருக்க
முடியாது.எனினும்,
               மனதுக்குள்ளே  காமத்தை  அடக்கப் பழகுவோம் ,
             கடவுளை  நமக்கு அருகாமையில்  வைக்க , தியானத்தின்
மூலம்  கடவுளை  நோக்கி  நகர்வோம் ...
                                               வாழ்க   வளமுடன் .....


Saturday, August 21, 2010

THE POSITIVE SIDE OF LIFE


                                                                                                                                                                                                 Living on Earth is expensive,
But it does include a free trip
Around the sun every year.

How long a minute is
Depends on what side of the
Bathroom door you're on.

Birthdays are good for you;
The more you have,
The longer you live.

Happiness comes through doors you
Didn't even know you left open.

Ever notice that the people who are late
Are often much jollier
Than the people who have to wait for them?

Most of us go to our grave
With our music still inside of us.

If Wal-Mart is lowering prices every day,
How come nothing is free yet?


You may be only one person in the world,
But you may also be the world to one person.

Some mistakes are too much fun
To only make once.

Don't cry because it's over;
Smile because it happened.

We could learn a lot from crayons:
Some are sharp, some are pretty,
Some are dull, some have weird names,
And all are different colors....but
They all exist very nicely in the same box.

A truly happy person is one who
Can enjoy the scenery on a detour.


Have an awesome day, and
Know that someone
Who thinks you're great
Has thought about you today!..
                                         
From:
M. Nandakumar
    
                       

Saturday, August 14, 2010

வாழ்வியல் தத்துவம் "அன்பு"

      
                                  அன்பு     
   அன்பிற்கே   உவமையாய்    தாய்மை 
          அன்பிற்கே   உரிமையாய்   சிவம்                        அன்பிற்கே   இனிமையாய்   தென்றல் 
           அன்பே   உருவானது   காதல்.

 அன்பே    சுகமானவள்     தாரம்
           அன்பே  சுவையானது   பாசம்
அன்பே   வடிவானவன்    நண்பன் 
          அன்பே  உருவானது   கனிவு.
     
அன்பே   நற்போதனை  ஆசான்
          அன்பே  நற்கருணை   குரு
 அன்பின்   பிறப்பிடம்  குழந்தை
          அன்பின் உறைவிடம்   இயற்கை.
  
  அன்பாலே விளைவது  உயர்வு
           அன்பாலே  அழிவது   பொறாமை 
    அன்பின்  முகவரி  ஆண்டவன்
             அன்பே  சிவம்  மனத்தெளிவு.
 
    அன்பே  தெளிவுற   அகிம்சை
            அன்பின்  ஆட்சி  ஈகை 
    அன்பின்  தொடர்வே  பிறப்பு   
             அன்பின்  முடிவே  மரணம்.


Sunday, August 8, 2010

ஆசையை அடக்க முடியுமா?

               ஆசை 

வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.
அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.
`வேண்டும்என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. `போதும்என்ற மனம் சாகும்வரை வருவதில்லை.
ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான்.
ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது.
ஆசை எந்தக் கட்டத்தில் நின்றுவிடுகிறதோ, அந்தக் கட்டத்தில் சுயதரிசனம் ஆரம்பமாகிறது.
சுயதரிசனம் பூர்த்தியானவுடன், ஆண்டவன் தரிசனம் கண்ணுக்குத் தெரிகிறது.
ஆனால் எல்லோராலும் அது முடிகிறதா?
லட்சத்தில் ஒருவருக்கே ஆசையை அடக்கும் அல்லது ஒழிக்கும் மனப்பக்குவம் இருக்கிறது.
என் ஆசை எப்படி வளர்ந்ததென்று எனக்கே நன்றாகத் தெரிகிறது.
சிறு வயதில் வேலையின்றி அலைந்தபோதுமாதம் இருபது ரூபாயாவது கிடைக்கக்கூடிய வேலை கிடைக்காதா?” என்று ஏங்கினேன்.
கொஞ்ச நாளில் கிடைத்தது.
மாதம் இருபத்தைந்து ரூபாய் சம்பளத்திலே ஒரு பத்திரிகையில் வேலை கிடைத்தது.
ஆறு மாதம்தான் அந்த நிம்மதி.
மாதம் ஐம்பது ரூபாய் கிடைக்காதா?” என்று மனம் ஏங்கிற்று.
அதுவும் கிடைத்தது, வேறொரு பத்திரிகையில்.
பிறகு மாதம் நூறு ரூபாயை மனது அவாவிற்று.
அதுவும் கிடைத்தது.
மனது ஐநூறுக்குத் தாவிற்று.
அது ஆயிரமாக வளர்ந்தது.
ஈராயிரமாகப் பெருகிற்று.
யாவும் கிடைத்தன.
இப்பொழுது நோட்டடிக்கும் உரிமையையே மனது கேட்கும் போலிருக்கிறது!
எந்தக் கட்டத்திலும் ஆசை பூர்த்தியடையவில்லை.
`இவ்வளவு போதும்என்று எண்ணுகிற நெஞ்சு, `அவ்வளவுகிடைத்ததும், அடுத்த கட்டத்திற்குத் தாண்டுகிறதே, ஏன்?
அதுதான் இறைவன் லீலை!
ஆசைகள் அற்ற இடத்தில், குற்றங்கள் அற்றுப் போகின்றன.
குற்றங்களும் பாபங்களும் அற்றுப்போய் விட்டால் மனிதனுக்கு அனுபவங்கள் இல்லாமல் போய்விடுகின்றன.
அனுபவங்கள் இல்லையென்றால், நன்மை தீமைகளைக் கண்டுபிடிக்க முடியாது.
ஆகவே தவறுகளின் மூலமே மனிதன் உண்மையை உணர்ந்து கொள்ளவேண்டும் என்பதற்காக, இறைவன் ஆசையைத் தூண்டிவிடுகிறான்.

ஆசையை மூன்றுவிதமாகப் பிரிக்கிறது இந்து மதம்.
மண்ணாசை!
பொன்னாசை!
பெண்ணாசை!
மண்ணாசை வளர்ந்துவிட்டால், கொலை விழுகிறது.
பொன்னாசை வளர்ந்துவிட்டால், களவு நடக்கிறது.
பெண்ணாசை வளர்ந்துவிட்டால், பாபம் நிகழ்கிறது.
இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு.
ஆகவேதான், பற்றற்ற வாழ்க்கையை இந்துமதம் போதித்தது.
பற்றற்று வாழ்வதென்றால், எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போய் சந்நியாசி ஆவதல்ல!
இருப்பது போதும்; வருவது வரட்டும்; போவது போகட்டும்; மிஞ்சுவது மிஞ்சட்டும்என்று சலனங்களுக்கு ஆட்படாமல் இருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்.
ஆசை, தீமைக்கு அடிப்படையாக இல்லாதவரை, அந்த ஆசை வாழ்வில் இருக்கலாம் என்கிறது இந்து மதம்.
நான் சிறைச்சாலையில் இருந்தபோது கவனித்தேன்.
அங்கே இருந்த குற்றவாளிகளில் பெரும்பாலோர் ஆசைக் குற்றவாளிகளே.
மூன்று ஆசைகளில் ஒன்று அவனைக் குற்றவாளியாக்கி இருக்கிறது.
சிறைச்சாலையில் இருந்துகொண்டு, அவன்முருகா, முருகா!” என்று கதறுகிறான்.
ஆம், அவன் அனுபவம் அவனுக்கு உண்மையை உணர்த்துகிறது.
அதனால்தான்பரம்பொருள் மீது பற்று வை; நிலையற்ற பொருள்
களின் மீது ஆசை வராதுஎன்கிறது இந்துமதம்.
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்குஎன்பது திருக்குறள்.
ஆசைகளை அறவே ஒழிக்க வேண்டியதில்லை. அப்படி ஒழித்துவிட்டால் வாழ்க்கையில் என்ன சுகம்?
அதனால்தான் `தாமரை இலைத் தண்ணீர் போல்என்று போதித்தது இந்து மதம்.
நேரிய வழியில் ஆசைகள் வளரலாம். ஆனால் அதில் லாபமும் குறைவு, பாபமும் குறைவு.
ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்த்து ஐநூறு ரூபாய் மட்டுமே கிடைத்தால் அந்த ஐநூறு உனக்குப் பணமாகத் தெரியாது.
இருநூறு எதிர்பார்த்து உனக்கு ஐநூறு கிடைத்தால், நிம்மதி வந்துவிடுகிறது.
எதிர்பார்ப்பதைக் குறைத்துக் கொள்; வருவது மனதை நிறைய வைக்கிறதுஎன்பதே இந்துக்கள் தத்துவம்.
எவ்வளவு அழகான மனைவியைப் பெற்றவனும், இன்னொரு பெண்ணை ஆசையோடு பார்க்கிறானே, ஏன்?
லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களைப் பெற்றவன் மேலும் ஓர் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதென்றால் ஓடுகிறானே, ஏன்?
அது ஆசை போட்ட சாலை.
அவன் பயணம் அவன் கையிலில்லை; ஆசையின் கையில் இருக்கிறது.
போகின்ற வேகத்தில் அடி விழுந்தால் நின்று யோசிக்கிறான்; அப்போது அவனுக்குத் தெய்வ ஞாபகம் வருகிறது.
அனுபவங்கள் இல்லாமல், அறிவின் மூலமே தெய்வத்தைக் கண்டுகொள்ளும்படி போதிப்பதுதான் இந்துமதத் தத்துவம்.
`பொறாமை, கோபம்எல்லாமே ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்தான்.
வாழ்க்கைத் துயரங்களுக்கெல்லாம் மூலகாரணம் எதுவென்று தேடிப் பார்த்து, அந்தத் துயரங்களிலிருந்து உன்னை விடுபடச் செய்ய, அந்தக் காரணங்களைச் சுட்டிக் காட்டி, உனது பயணத்தை ஒழுங்குபடுத்தும் வேலையை இந்துமதம் மேற்கொண்டிருக்கிறது.
இந்துமதம் என்றும் சந்நியாசிகளின் பாத்திரமல்ல. அது வாழ விரும்புகிறவர்கள், வாழ வேண்டியவர்களுக்கு வழிகாட்டி.
வள்ளுவர் சொல்லும் வாழ்க்கை நீதிகளைப் போல இந்து மதமும் நீதிகளையே போதிக்கிறது.
அந்த நீதிகள் உன்னை வாழவைப்பதற்கே அல்லா மல் தன்னை வளர்த்துக் கொள்வதற்காக அல்ல.
உலகத்தில் எங்கும் நிர்பந்தமாகத் திணிக்கப்படாத மதம், இந்து மதம்.
உன் உள்ளம் நிர்மலமாக, வெண்மையாக, தூய்மையாக இருக்கிறது என்பதற்கு அடையாளமாகவே அது `திருநீறுபூசச் சொல்லுகிறது.
உன் உடம்பு, நோய் நொடியின்றி ரத்தம் சுத்தமாக இருக்கிறது என்பதற்காகவே, `குங்குமம்வைக்கச் சொல்கிறது.
`இவள் திருமணமானவள்என்று கண்டுகொண்டு அவளை நீ ஆசையோடு பார்க்காமலிருக்கப் பெண்ணுக்கு அது `மாங்கல்யம்சூட்டுகிறது.
தன் கண்களால் ஆடவனுடைய ஆசையை ஒரு பெண் கிளறி விடக் கூடாது என்பதற்காவே, அவளைத் `தலை குனிந்துநடக்கச் சொல்கிறது.
யாராவது ஆடவன் தன்னை உற்று நோக்குகிறான் என்பதைக் கண்டால், இந்தப் பெண்கள் மார்பகத்து ஆடையை இழுத்து மூடிக் கொள்கிறார்களே, ஏன்?
ஏற்கெனவே திருத்தமாக உள்ள ஆடையை மேலும் திருத்துகிறார்களே, ஏன்?
எந்தவொரு `கவர்ச்சியும் ஆடவனுடைய ஆசையைத் தூண்டி விடக்கூடாது என்பதால்.
ஆம்; ஆடவன் மனது சலனங்களுக்கும், சபலங்களுக்கும் ஆட்பட்டது.
கோவிலிலே தெய்வ தரிசனம் செய்யும்போது கூட கண் கோதையர்பால் சாய்கிறது.
அதை மீட்க முடியாத பலவீனனுக்கு, அவள் சிரித்துவிட்டால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோல் ஆகிறது.
பொம்பளை சிரிச்சா போச்சு; புகையிலை விரிச்சாப் போச்சுஎன்பது இந்துக்கள் பழமொழி.
கூடுமானவரை மனிதனைக் குற்றங்களில் இருந்து மீட்பதற்கு தார்மீக வேலி போட்டு வளைக்கிறது இந்துமதம்.
அந்தக் குற்றங்களில் இருந்து விடுபட்டவனுக்கே நிம்மதி கிடைக்கிறது.
அந்த நிம்மதியை உனக்கு அளிக்கவே இந்துமதத் தத்துவங்கள் தோன்றின.
இன்றைய இளைஞனுக்கு ஷேக்ஸ்பியரைத் தெரியும்; ஷெல்லியைத் தெரியும்; ஜேம்ஸ்பாண்ட் தெரியும். கெட்டுப் போன பின்புதான், அவனுக்குப் பட்டினத்தாரைப் புரியும்.
ஓய்ந்த நேரத்திலாவது அவன் ராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களைப் படிப்பானானால், இந்துமதம் என்பது வெறும் `சாமியார் மடம்என்ற எண்ணம் விலகிவிடும்.
நியாயமான நிம்மதியான வாழ்க்கையை நீ மேற்கொள்ள, உன் தாய் வடிவில் துணை வருவது இந்துமதம்.
ஆசைகளைப் பற்றி பரமஹம்சர் என்ன கூறுகிறார்?
ஆழமுள்ள கிணற்றின் விளிம்பில் நிற்பவன், அதனுள் விழுந்துவிடாமல் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பதைப்போல் உலக வாழ்க்கையை மேற்கொண்டவன் ஆசாபாசங்களில் அமிழ்ந்துவிடாமல் இருக்க வேண்டும்என்கிறார்.
அவிழ்த்து விடப்பட்ட யானை, மரங்களையும் செடி கொடிகளையும் வேரோடு பிடுங்கிப் போடுகிறது. ஆனால் அதன் பாகன் அங்குசத்தால் அதன் தலையில் குத்தியதும், அது சாந்தமாகி விடுகிறது.”
அதுபோல, அடக்கியாளாத மனம் வீண் எண்ணங்களில் ஓடுகிறது.”
விவேகம் என்ற அங்குசத்தால் அது வீழ்த்தப்பட்டதும் சாந்தமாகிவிடுகிறதுஎன்றார்.                                                     அடக்கியாள்வதன் பெயரே வைராக்கியம்.
                                                கண்ணதாசனின்     
அர்த்தமுள்ள இந்துமதம் வாசிக்க வாசிக்க இன்பம்.

Thursday, August 5, 2010

Extraordinary Personalities Reflect Upon Srimad BHAGAVAD-GITA

 Extraordinary Personalities

Reflect Upon

Srimad

BHAGAVAD-GITA

Albert Einstein
Mahatma Gandhi
Dr. Albert Schweizer
Aurobindo
Carl Jung
Prime Minister Nehru
Herman Hesse
Vivekananda
Ralph Waldo Emerson
Paramahamsa Yogananda
Rudolph Steiner
Adi Shankara
Aldous Huxley
Ramanuja
Bhaktisiddhanta Saraswati Srila Prabhupada
Baladeva Vidyabhusana
Madhvacarya
Sri Caitanya Mahaprabhu
 
 
Albert Einstein
When I read the Bhagavad-Gita and reflect about how God created this universe everything else seems so superfluous.
 
Mahatma Gandhi
The Bhagavad-Gita calls on humanity to dedicate body, mind and soul to pure duty and not to become mental voluptuaries at the mercy of random desires and undisciplined impulses.
 
Dr. Albert Schweizer
The Bhagavad-Gita has a profound influence on the spirit of mankind by its devotion to God which is manifested by actions.
 
Aurobindo
The Bhagavad-Gita is a true scripture of the human race a living creation rather than a book, with a new message for every age and a new meaning for every civilization.
 
Carl Jung
The idea that man is like unto an inverted tree seems to have been current in by gone ages. The link with Vedic conceptions is provided by Plato in his Timaeus in which it states..." behold we are not an earthly but a heavenly plant." This correlation can be discerned by what Krishna expresses in chapter 15 of  Bhagavad-Gita.
 
Prime Minister Nehru
The Bhagavad-Gita deals essentially with the spiritual foundation of human existence. It is a call of action to meet the obligations and duties of life; yet  keeping in view the spiritual nature and grander purpose of the universe.

Herman Hesse
The marvel of the Bhagavad-Gita is its truly beautiful revelation of  lifes wisdom which enables philosophy to blossom into religion.

Vivekananda
The secret of karma yoga which is to perform actions without any fruitive desires is taught  by Lord Krishna in the Bhagavad-Gita.

Ralph Waldo Emerson
The Bhagavad-Gita  is an empire of thought and in its philosophical teachings Krishna has all the attributes of the full-fledged montheistic deity and at the same time  the attributes of the Upanisadic absolute.

Paramahamsa Yogananda
The Bhagavad-Gita is where God Himself talks to His devotee Arjuna.

Rudolph Steiner
In order to approach a creation as sublime as the Bhagavad-Gita with full understanding it is necessary  to attune our soul to it.

Adi Sankara
From a clear knowledge of the Bhagavad-Gita all the goals of human existence become fulfilled. Bhagavad-Gita is the manifest quintessence of all the teachings of the Vedic scriptures.

Aldous Huxley
The Bhagavad-Gita is the most systematic statement of spiritual evolution of endowing value to mankind. It is one of the most clear and comprehensive summaries of perennial philosophy ever revealed; hence its enduring value is subject not only to India but to all of humanity.

Ramanuja
The Bhagavad-Gita  was spoken by Lord Krishna to reveal the science of devotion to God which is the essence of all spiritual knowledge. The Supreme Lord Krishnas primary purpose for descending and incarnating is relieve the world of any demoniac and negative, undesirable influences that are opposed to spiritual developement, yet simultaneously it is His  incomparable intention to be perpetually within reach of all humanity.

Bhaktisiddhanta Saraswati Srila Prabhupada
The Bhagavad-Gita is not seperate from the Vaisnava philosophy and the Srimad Bhagavatam fully reveals the true import of this doctrine which is transmigation of the soul. On perusal of the first chapter of Bhagavad-Gita one may think that they are advised to engage in warfare. When the second chapter has been read it can be clearly understood that knowledge and the soul is the ultimate goal to be attained. On studying the third chapter it is apparent that  acts of righteousness are also of  high priority. If we continue and  patiently take the time to complete the Bhagavad-Gita and try to ascertain the truth of its closing chapter we can see that the ultimate conclusion is to relinquish all the conceptualized ideas of religion which we possess and fully surrender directly  unto the Supreme Lord.

Baladeva Vidyabhusana
Those that have the qualification to understand the Bhagavad-Gita are of three categories: Those who are inherently reverent, those who are verily righteous and sincere in the performance of their daily scriptural duties and those who are of controlled senses.

Madhvacarya
The Mahabharata has all the essential ingredients necessary to evolve and protect  humanity and that within it the Bhagavad-Gita is the epitome of the Mahabharata just as ghee is the essence of milk and pollen is the essence of flowers.

Sri Caitanya Mahaprabhu
Advise everyone to follow the instructions of  Srimad Bhagavad-Gita as spoken by  Lord Krishna. In this way authorised by Me become a spiritual master and redeem this world.


 


Thank u Mr MSS for this extraordinary fwd : BRT Rajan