Saturday, August 14, 2010

வாழ்வியல் தத்துவம் "அன்பு"

      
                                  அன்பு     
   அன்பிற்கே   உவமையாய்    தாய்மை 
          அன்பிற்கே   உரிமையாய்   சிவம்                        அன்பிற்கே   இனிமையாய்   தென்றல் 
           அன்பே   உருவானது   காதல்.

 அன்பே    சுகமானவள்     தாரம்
           அன்பே  சுவையானது   பாசம்
அன்பே   வடிவானவன்    நண்பன் 
          அன்பே  உருவானது   கனிவு.
     
அன்பே   நற்போதனை  ஆசான்
          அன்பே  நற்கருணை   குரு
 அன்பின்   பிறப்பிடம்  குழந்தை
          அன்பின் உறைவிடம்   இயற்கை.
  
  அன்பாலே விளைவது  உயர்வு
           அன்பாலே  அழிவது   பொறாமை 
    அன்பின்  முகவரி  ஆண்டவன்
             அன்பே  சிவம்  மனத்தெளிவு.
 
    அன்பே  தெளிவுற   அகிம்சை
            அன்பின்  ஆட்சி  ஈகை 
    அன்பின்  தொடர்வே  பிறப்பு   
             அன்பின்  முடிவே  மரணம்.


No comments:

Post a Comment