உங்களுகென்று உள்ள கருத்துக்களைக்
கொண்டுமற்றவர்களை மதிப்பிட்டு விடாதீர்கள் .
வெளித் தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு
செய்ய வேண்டாம் , பழகிப் பார்த்து முடிவு செய்யவும்.
பிறர் கூறுவதை உன்னிப்பாக கவனிக்கவும் .
எல்லோருக்கும் தலைக்கனம் உண்டு. அதற்காக பிறரை
துச்சமென மதிக்க வேண்டாம், வெறுக்கவும் வேண்டாம்.
குறைவாகப் பேசுங்கள், அதன் மூலம் நிறைய கற்றுக்
கொள்வீர்கள்.
பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். அதே போல
உங்களுடைய நேரத்தையும் பிறர் வீணாக்க ஒரு
போதும் அனுமதிக்காதீர்கள்.
போதும் அனுமதிக்காதீர்கள்.
ஒருவருக்கு உதவி செய்ய நினைத்தால் அவர் பற்றிய
முழு விபரமும் அறிந்து, பின் உதவி செய்யுங்கள்.
நீங்கள் மேலதிகாரியாக இருந்தால் உங்களின் கீழ்
பணி புரிபவர்களிடம், முடிவு செய்தல் , செய்த முடிவை
மாற்றுதல், வேலையை முடித்தல் இவற்றில் முழு
சுதந்திரம் கொடுங்கள்.
எல்லா குழந்தைகள் மீதும் அன்பு செலுத்துங்கள். இதன்
மூலம் குழந்தைகளிடமும் அவர்களின் பெற்றோரிடமும்
நன்மதிப்பு பெற முடியும்.
ஒருவரை பாராட்டும் போது முழு மனதுடன்
பாராட்டுங்கள். போலியான பாராட்டு எப்போதுமே
நன்மை தருவதில்லை.
பாராட்டுங்கள். போலியான பாராட்டு எப்போதுமே
நன்மை தருவதில்லை.
தவறுகள் மனிதர்களிடம் இயல்பு. அதனை
அனுமதிப்பதில் தவறு இல்லை. மீண்டும் 'அப்படி'
நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொள்ளுங்கள்.
அனுமதிப்பதில் தவறு இல்லை. மீண்டும் 'அப்படி'
நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்
என்று கேட்டுக் கொள்ளுங்கள்.
உங்களை சுற்றிஇருப்பவர்களே உங்கள் கூட்டாளிகள்
மற்றும் நண்பர்கள். உங்களின் உலகமே அவர்களாக
இருக்கக் கூடும். அவர்கள் அனைவரையும் ஒரே
நேரத்தில் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மற்றும் நண்பர்கள். உங்களின் உலகமே அவர்களாக
இருக்கக் கூடும். அவர்கள் அனைவரையும் ஒரே
நேரத்தில் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
உங்களுக்கு ஒன்றைப் பற்றி தெரியாவிட்டால்
உண்மையை சொல்லி விடுங்கள். தெரியும்
என்று நடிக்காதீர்கள்.
உண்மையை சொல்லி விடுங்கள். தெரியும்
என்று நடிக்காதீர்கள்.
தவறு செய்தால் அதைஒப்புக் கொள்ள தயங்காதீர்கள்..!
அப்படி ஒப்புக் கொண்டால் மற்றவர்களுக்கு உங்களை
பிடித்துப் போகும்.
வெற்றிபெற்றால் எல்லோருடனும் சேர்ந்துதான் இந்த
வெற்றி என்று அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment