மழை மேகம் தண்ணீர் கொடுக்க
தவறிவிட்டால் தாவரங்கள் பூமிக்குள்ளே
தன்னுடைய வேரை நீட்டி தண்ணீர்
தேடுமேயன்றி தற்கொலை செய்து
கொள்ளுமா?... தன்னைத்தானே மாய்த்துக்
கொள்ளும் செயலே தற்கொலை.
தாம் மற்றவர்களுக்கு ஒரு சுமை
எனக்கருதி ,இந்த வாழ்க்கை தேவையற்றது, உயிர்
வாழ்வது வீண் என்று தற்கொலை செய்து கொள்பவன்
நினைக்கிறான்.
தற்கொலை ஒரு நோய். உணர்ச்சி வசப்படுதலின்கணநேர முடிவு.
இது வாழ்க்கைச் சிக்கலை எதிர்த்து நிற்கும்
திறமையின்மையின் வெளிப்பாடு.
சில பத்திரிக்கைகள், திரைப்படங்கள், சில அரசியல்
சக்திகள் கூட இதை தூண்டி விடுகின்றன.
தற்கொலை எப்போதுமே இருவர் சம்பந்தப்பட்டது. இவர்கள் ....காதலன், காதலியாகவோ
கணவன், மனைவியாகவோ
பெற்றோர், குழந்தைகளாகவோ மற்றும்
தலைவன், தொண்டனாகவோ இருக்கலாம்.
தற்கொலையின் காரணங்கள்
மன நோய் , மன வருத்த நோய் , மனச்சிதைவு நோய் ,
குடி போதை அடிமைகள் , பொருளாதார வறுமை ,
சுயநலம் , அரசியல் , முதுமை , தனிமை , ஏமாற்றம் ,
அவமானம் , காதல் தோல்வி ,இழப்பு ,மற்றும் குடும்ப
சண்டை முதலியன.
இது போன்ற காரணங்களால் விஷம் அருந்துதல்
தூக்க மாத்திரை சாப்பிடுதல் ,தீக்குளித்தல் , தூக்கில் தொங்குதல் ,உயரத்தில் இருந்து குதித்தல் ,வாகனங்களில்
விழுதல் போன்ற தற்கொலை முயற்சிகள் நடக்கின்றன.
தற்கொலையின் மூல காரணங்கள்
பக்குவப்படாத மனநிலை
உணர்ச்சியில் அவசர முடிவு
இழப்பு , ஏமாற்றங்களை தாங்க முடியாமை
பிரச்சினைகளை சமாளித்து எதிர்நீச்சல் போடத்
தெரியாமை,உலகம் அறியா கிணற்றுத் தவளை
வாழ்க்கை,நினைத்ததை சாதிக்கும் பிடிவாதம் ,
தோல்வியில் முடிதல்,
மற்றவர்களை பழிவாங்கும் முயற்சி,
நிரந்தர பாதுகாப்பு இல்லையென நினைத்தல்
அல்ப விஷயங்களுக்குக் கூட குழப்பமடைதல்-
மேற்கூறிய காரணங்களால் ஒருவருக்கு
வருத்தங்களும்,குழப்பங்களும் ஏற்படும்போது
மன உழைச்சலைத் தூண்டுகிறது .
இதிலிருந்து தப்பிக்க தற்கொலை ஒன்றே தீர்வு
என மனம் மீண்டும் மீண்டும் தூண்டப்படுகிறது .
தற்கொலை செய்ய எண்ணுபவர்கள்
ஒரு தடவையாவது தன்எண்னத்தை வெளியிடவே
செய்வார்கள். இதை நாம் ஒருமுன் எச்சரிக்கையாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.அவர்களின் பிரச்சினையை
அருகிலிருக்கும் நாம் உணர்ந்து நல்ல தீர்வு
காண வேண்டும்
இது சற்று கடினம்தான். ஆனாலும் சரியான
சமயத்தில் அவர்களின் மனநிலையை அடையாளம்
கண்டுகொண்டு நல்ல ஒரு மனநிலை மருத்துவரிடம்
ஆலோசனை பெற்று தடுக்க வேண்டும்.
நம்மில் பலருக்கும் ஒவ்வொரு காலகட்டத்தில்
இந்ததற்கொலை எண்ணம் மனதில் லேசாக
தட்டிப் பார்த்து போயிருக்கலாம். ஆனாலும்
அதிலேயே , அந்தப் பிரச்சினையிலேயே
மூழ்கி விடாமல், எதிர்கொண்டு
வெற்றி பெற்றும் இருக்கலாம் .
தீர்வுகள் ....!
பிரச்சினைகளை சமாளிக்க, மனதில் உறுதியும் ,
தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையும் வேண்டும்.
பிரச்சினைகளைத் தீர்க்க தனிமை சிந்தனை
வெற்றி தருவதுகடினமே .எனவே நண்பரிடமோ,
உறவினரிடமோ ஆலோசனை கேளுங்கள்.
உயிர் பெரியது, உயிருக்கு முன் எந்தப்
பிரச்சினையும் தூசி போலத்தான்.
பிரச்சினைகளை மனம் விட்டுப் பேசித் தீருங்கள் .
கவலைகளை களை எடுங்கள் .
தனிமை மனதில் தவறான எண்ணங்களை
தந்தால் குடும்பமருத்துவரிடமோ , மனநல மருத்துவரிடமோ
ஆலோசனை பெறுங்கள் .
ஏமாற்றம், கோபம் , மனபாரம் ஆகியவற்றை
கடவுள் நம்பிக்கைஇருந்தால் அவரிடம் ஒப்படைங்கள் ,
மனம் லேசாகும்.
நல்ல ஆலோசனைகள் , அன்பு , அரவணைப்பு ,
ஆதரவு போன்றநேசக்கரம் நீட்டினால் தற்கொலை
முயற்சியை நிச்சயமாகத் தடுக்க முடியும்.
வாழ்க்கை வாழ்வதற்கே .....வாழ்ந்து தான் பார்க்கணும்...
வாழ்க்கையே போர்க்களம் ... வாழ்ந்து தான் ஜெயிக்கணும் ...
வாழ நினைத்தால் வாழலாம் ... வாழ நினை மனமே...
No comments:
Post a Comment