Thursday, September 16, 2010

10 Tricks for Improving Your Memory


What’s the name of your daughter’s teacher, and where did you put your keys again? If you’ve ever wished you could do some simple things to sharpen your memory skills, you can. We’ve talked to the experts and compiled the latest thinking on improving the muscles in your brain associated with memory.
1. Talk with your hands.
It may sound strange, but waving your hands and gesturing while trying to learn a concept may help your brain remember something important, says Jeff Brown, PsyD, ABPP, coauthor of The Winner’s Brain. "Gesturing in a meaningful way while you are learning may help you when recalling the concept,” he says. “The idea is that you are storing at least two different types of information about something you'll need to recall later. A good example of this is when kids speak math problems aloud, but also 'work them' in the air.” Tactics to try: When you’ve just learned someone’s name, “write” it down on the palm of your hand with your finger. The act of tracing the letters on your palm (discreetly, of course) can help your brain remember it, says Dr. Brown. Or, “Air-write on an imaginary map of your grocery store or mall as you name aloud the items or stores you need to remember when shopping.”
2. Take a chill pill.
Learning to calm down and not carry as much stress can help your brain in significant ways, says Elizabeth Lombardo, PhD, PT, a psychologist and physical therapist in Wexford, Pennsylvania, and the author of A Happy You: Your Ultimate Prescription for Happiness. “The best tip to improve your memory is: Reduce your stress,” says Dr. Lombardo. “Research shows that when people experience chronic stress, their hippocampus—the part of your brain that is responsible for some memories—literally shrinks in size.” In fact, a 2007 study in the journal Neurology by researchers at
Rush University Medical School found that people who are easily distressed and had more negative emotions were more likely to develop memory problems than more easygoing people. How to reduce your stress? Consider delegating more tasks at work, clearing your social calendar for the weekend (there’s nothing wrong with having nothing on the calendar!) and purging negative relationships from your life.
3. Get plenty of zzz’s.
You’ve heard the concept of “sleeping on it” when you’re faced with a problem or difficult decision, right? Well, getting a good night’s sleep can help you improve your memory, too. "Sleep is critical for memory consolidation,” says Dr. Brown. “Getting at least six hours of uninterrupted sleep following exposure to new information can help in the recall of that information.” But there’s an important side note: “The trick is going directly to bed without inserting any new information or activity between what you want to recall and going to sleep—no reading, no TV, no sex, no music."
4. Eat more fruits and veggies.
Eating your spinach—and carrots and peas—is not only good for your body, it’s good for your memory, too. A recent Harvard study found that people who ate more vegetables had a slower decline of brain function as they aged. “Other studies, such as one published in Pharmacology, have shown that essential brain-boosting nutrients found in certain produce, such as quercetin and anthocyanin, may reverse memory loss,” says Tosca Reno, a health and fitness expert and author of the bestselling book The Eat-CleanDiet. You can find these compounds in cruciferous vegetables, such as Brussels sprouts, broccoli and cabbage, as well as in leafy greens, including kale, spinach and Swiss chard. Also load up on brightly colored produce such as berries, red apples, eggplant and grapes—their bright hue is an indication of their brain-boosting antioxidants.
5. Join a book club.
Not only is reading great for your brain, but discussing what you’ve read can improve your memory by leaps and bounds, says Sandra Bond Chapman, PhD. In fact, a book club with your closest girlfriends may help strengthen your brain’s frontal lobe function. “The frontal lobe is the last region of the brain to develop, but the first to decline with age,” explains Dr. Chapman. “To strengthen function of the frontal lobe, engage in deeper-level thinking activities such as interpreting what you read in a book, discussing the ‘larger messages’ in the book and pushing to see how many meanings you can derive from it.”
6. Go to yoga class.
What can a downward-facing-dog pose do for your memory? A lot, says Gina Norman, a yoga teacher in
New York City. “A new study out of the University of North Carolina shows that brief meditative exercise helps cognition and skills essential to critical thinking,” she says. But if you’re not into yoga, exercise of any kind works to boost your brain, says Dr. Lombardo. “Research shows that exercise increases the blood flow to all areas of your body, including the brain and specifically areas involved in memory,” she says. “One study found that mice who exercised grew new brain cells in the dentate gyrus, a part of the hippocampus which can be affected by declines in memory as we get older.” Short on time? “Try running up a flight of stairs, jogging to a bathroom that is farther away from you, doing 50 jumping jacks, putting on a great song and dancing around, or grabbing your child’s hand and jumping on the bed together.”
7. Sniff some rosemary.
Parsley and sage are great, as is thyme, but when it comes to improving memory, rosemary is king. In a recent study,
UK researchers looked at scents and how they boosted or detracted from mental performance. They found that office workers whose cubicles were infused with the scent of rosemary had better long-term memory than those in unscented cubes. “There are other essential oils that can help with memory, but rosemary is by far the best and most economical,” says Cher Core, an aromatherapist in Boston. “Diffuse rosemary essential oil in the air, wear it in a perfume, use it in mists and more. It is a good choice for those studying and folks who need help with memory, focus and concentration.”
8. Pay attention.
Duh, right? It may sound obvious, but according to experts, when most people think they’re having memory problems, it’s really because they were distracted or didn’t record the information in their brain properly to begin with, says Linda Edelstein, PhD, adjunct faculty at Northwestern University and the author of The Art of Midlife. “When people cannot retrieve information it is often because they haven't taken it in in the first place,” she says. “You cannot recall information that you did not store.” The number-one trick to paying closer attention? Stop multitasking and be fully present. That means setting down the BlackBerry while lunching with your friend, turning off the TV when you’re trying to read something and not letting your eyes—or mind—wander when chatting with someone at a party. You’ll be more likely to remember the person’s name.
9. Learn a new song.
Have you ever found yourself singing along to a song you love that debuted 10 years ago, and yet you still don’t know the lyrics? Learning the words could be fun, but it could also be good for your memory in general. By memorizing a song, “you will be working out at least two different kinds of memory, auditory and verbal, which is probably something you don't do very often,” says Cynthia Green, PhD, an expert on brain health and memory. “The research suggests that constantly challenging our brains with intellectual pursuits may boost our ‘cognitive reserve’ and can have the associated benefit of reducing our dementia risk over the long-term.”
10. Go ahead and doodle.
When’s the last time you grabbed a pencil and paper and let your mind go—drawing hearts and rainbows, or whatever scene or object popped into your head? Surprisingly, says Dr. Green, a free-flowing pen could be the key to strengthening your brain’s memory centers. “Doodling has been found in studies to boost concentration, which is an essential first step to learning and memory,” says Dr. Green. “After all, if you can't focus on information, you don't acquire it effectively, and you can never remember something you don't learn in the first place!” 
 From net

10 Rules For A Good Day


1. TODAY I WILL NOT STRIKE BACK:
If someone is rude, if someone is impatient, if someone is unkind...I will not respond in a like manner.

2. TODAY I WILL ASK GOD TO BLESS MY "ENEMY":
If I come across someone who treats me harshly or unfairly, I will quietly ask God to bless that individual. I understand the "enemy" could be a family member, neighbor, co-worker, or a stranger.

3. TODAY I WILL BE CAREFUL ABOUT WHAT I SAY:
I will carefully choose and guard my words being certain that I do not spread gossip.

4. TODAY I WILL GO THE EXTRA MILE:
I will find ways to help share the burden of another person.

5. TODAY I WILL FORGIVE:
I will forgive any hurts or injuries that come my way.

6. TODAY I WILL DO SOMETHING NICE FOR SOMEONE, BUT I WILL NOT DO IT SECRETLY:
I will reach out anonymously and bless the life of another.

7. TODAY I WILL TREAT OTHERS THE WAY I WISH TO BE TREATED:
I will practice the golden rule - "Do unto others as I would have them do unto me" - with everyone I encounter.

8. TODAY I WILL RAISE THE SPIRITS OF SOMEONE I DISCOURAGED:
My smile, my words, my expression of support, can make the difference to someone who is wrestling life.

9. TODAY I WILL NUTURE MY BODY:
I will eat less; I will eat only healthy foods. I will thank God for my body.

10. TODAY I WILL GROW SPIRITUALLY:
I will spend a little more time in prayer today: I will begin reading something spiritual or inspirational today; I will find a quiet place (at some point during the day)!

    From net

Sunday, September 12, 2010

தற்கொலை ஒரு தீர்வா?..... ஒரு வினாடி ப்ளீஸ்....

மழை  மேகம் தண்ணீர் கொடுக்க
தவறிவிட்டால் தாவரங்கள்  பூமிக்குள்ளே   
தன்னுடைய வேரை நீட்டி தண்ணீர்
தேடுமேயன்றி   தற்கொலை  செய்து
கொள்ளுமா?...  

 
தன்னைத்தானே  மாய்த்துக்
கொள்ளும்  செயலே  தற்கொலை.
தாம்  மற்றவர்களுக்கு  ஒரு சுமை
எனக்கருதி ,இந்த  வாழ்க்கை  தேவையற்றது,  உயிர் 
வாழ்வது  வீண்  என்று  தற்கொலை  செய்து  கொள்பவன்
நினைக்கிறான்.
   தற்கொலை  ஒரு நோய். உணர்ச்சி  வசப்படுதலின்
கணநேர  முடிவு. 
     இது  வாழ்க்கைச்  சிக்கலை எதிர்த்து  நிற்கும்  
திறமையின்மையின்   வெளிப்பாடு. 
   சில  பத்திரிக்கைகள்,  திரைப்படங்கள், சில அரசியல்
சக்திகள்  கூட  இதை  தூண்டி  விடுகின்றன.
தற்கொலை  எப்போதுமே  இருவர்  சம்பந்தப்பட்டது. இவர்கள் ....
காதலன், காதலியாகவோ
கணவன், மனைவியாகவோ
பெற்றோர்,  குழந்தைகளாகவோ  மற்றும்
தலைவன்,  தொண்டனாகவோ     இருக்கலாம்.
 
தற்கொலையின்  காரணங்கள்
 மன நோய் ,  மன வருத்த நோய் , மனச்சிதைவு நோய் ,
குடி போதை  அடிமைகள் , பொருளாதார  வறுமை ,
சுயநலம் ,   அரசியல் , முதுமை , தனிமை , ஏமாற்றம் ,
அவமானம் , காதல் தோல்வி ,இழப்பு ,மற்றும் குடும்ப    
சண்டை   முதலியன.
           இது  போன்ற  காரணங்களால்  விஷம்  அருந்துதல்
தூக்க மாத்திரை  சாப்பிடுதல் ,தீக்குளித்தல் , தூக்கில் 
தொங்குதல் ,உயரத்தில் இருந்து  குதித்தல் ,வாகனங்களில் 
விழுதல்  போன்ற தற்கொலை முயற்சிகள்  நடக்கின்றன. 

தற்கொலையின்  மூல  காரணங்கள்
         பக்குவப்படாத   மனநிலை
         உணர்ச்சியில்  அவசர  முடிவு
         இழப்பு , ஏமாற்றங்களை  தாங்க  முடியாமை
         பிரச்சினைகளை சமாளித்து  எதிர்நீச்சல்  போடத்  
  தெரியாமை,உலகம்  அறியா  கிணற்றுத்  தவளை  
  வாழ்க்கை,நினைத்ததை  சாதிக்கும்  பிடிவாதம் , 
  தோல்வியில் முடிதல்,  
   மற்றவர்களை  பழிவாங்கும்  முயற்சி,
     நிரந்தர  பாதுகாப்பு  இல்லையென  நினைத்தல்
     அல்ப விஷயங்களுக்குக்  கூட குழப்பமடைதல்-
      மேற்கூறிய  காரணங்களால்  ஒருவருக்கு 
வருத்தங்களும்,குழப்பங்களும்  ஏற்படும்போது  
மன உழைச்சலைத்  தூண்டுகிறது .

இதிலிருந்து  தப்பிக்க  தற்கொலை ஒன்றே  தீர்வு 
என மனம் மீண்டும் மீண்டும்  தூண்டப்படுகிறது .
        தற்கொலை  செய்ய  எண்ணுபவர்கள்  
ஒரு தடவையாவது  தன்எண்னத்தை  வெளியிடவே
செய்வார்கள். இதை  நாம்  ஒருமுன் எச்சரிக்கையாக  
எடுத்துக் கொள்ள  வேண்டும்.அவர்களின் பிரச்சினையை
அருகிலிருக்கும்  நாம்  உணர்ந்து  நல்ல  தீர்வு 
காண  வேண்டும் 
        இது  சற்று  கடினம்தான். ஆனாலும்  சரியான 
சமயத்தில் அவர்களின்  மனநிலையை  அடையாளம் 
கண்டுகொண்டு  நல்ல ஒரு மனநிலை  மருத்துவரிடம் 
ஆலோசனை  பெற்று தடுக்க வேண்டும்.
           நம்மில்  பலருக்கும்  ஒவ்வொரு  காலகட்டத்தில் 
இந்ததற்கொலை  எண்ணம்  மனதில்  லேசாக  
தட்டிப் பார்த்து போயிருக்கலாம். ஆனாலும்  
அதிலேயே , அந்தப் பிரச்சினையிலேயே
மூழ்கி  விடாமல், எதிர்கொண்டு  
வெற்றி பெற்றும் இருக்கலாம் .
 

தீர்வுகள் ....!
          பிரச்சினைகளை  சமாளிக்க, மனதில்  உறுதியும் ,
தீர்வு  காணமுடியும்  என்ற  நம்பிக்கையும்  வேண்டும்.
           பிரச்சினைகளைத்  தீர்க்க  தனிமை  சிந்தனை 
வெற்றி தருவதுகடினமே .எனவே நண்பரிடமோ,
உறவினரிடமோ ஆலோசனை கேளுங்கள்.
           உயிர்  பெரியது, உயிருக்கு   முன்  எந்தப்
பிரச்சினையும்  தூசி போலத்தான்.
       பிரச்சினைகளை  மனம் விட்டுப்   பேசித்  தீருங்கள் .       
கவலைகளை  களை எடுங்கள் .
      தனிமை  மனதில்  தவறான  எண்ணங்களை 
தந்தால்  குடும்பமருத்துவரிடமோ , மனநல மருத்துவரிடமோ 
ஆலோசனை  பெறுங்கள் .
      ஏமாற்றம், கோபம் , மனபாரம்  ஆகியவற்றை  
கடவுள்  நம்பிக்கைஇருந்தால்  அவரிடம்  ஒப்படைங்கள் ,
மனம் லேசாகும்.
    
    நல்ல ஆலோசனைகள் , அன்பு , அரவணைப்பு , 
ஆதரவு  போன்றநேசக்கரம்  நீட்டினால்  தற்கொலை 
முயற்சியை  நிச்சயமாகத்  தடுக்க  முடியும்.

வாழ்க்கை  வாழ்வதற்கே .....வாழ்ந்து தான்  பார்க்கணும்...
வாழ்க்கையே   போர்க்களம் ... வாழ்ந்து தான்  ஜெயிக்கணும் ...
வாழ  நினைத்தால்  வாழலாம் ... வாழ  நினை  மனமே...





  

Sunday, September 5, 2010

சித்தர்களைப் பற்றி ..... சிறு துளி .....


ஓம் அகத்தீசாய நமக ...

தமிழ் மரபில் சித்தர்கள் எனப்படும் குழுவினர் பல காலமாக இருக்கின்றனர். 'சித்துக்கள் கைவரப்பெற்றவர் சித்தர்' என்று பொருள்கொள்ளப்படுகிறது. சித்துக்கள் என்றால் என்ன? முதலில் அதைப் பார்ப்போம்.
திருவிளையாடல் புராணம் என்றொரு புராணம் இருக்கிறது.
மதுரையம்பதியில் சொக்கேசப்பெருமான் நிகழ்த்திய அறுபத்துநான்கு திருவிளையாடல்களைக் கூறும் புராணம், இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடல் புராணத்தில் பல படலங்கள் இருக்கின்றன. அவற்றில் சொக்கேசப்பெருமான் சித்தராக வந்து சித்துவிளையாடிய படலங்கள் சில இருக்கின்றன.
அவற்றில் ,
எல்லாம் வல்ல சித்தரான படலம்
அஷ்டமாசித்து உபதேசித்த படலம்
கல்லானைக்குக் கரும்பருத்திய படலம்
ஆகியவை முழுக்க முழுக்க சித்துவிளையாட்டுக்கள் பற்றியவை.
நரியைப் பரியாக்கியது, பரியை நரியாக்கியது, வைகையில் வெள்ளம் வரச்செய்தது, வெள்ளத்தை அடக்கியது, ரஸவாதம் செய்தது போன்றவையும் சித்துக்கள்தாம்.பொன்னைச் செயற்கையாகச் செய்வதை 'ரசவாதம்' என்று சொல்வார்கள். தமிழ்நாட்டுச் சித்தர்கள் இதில் தேர்ந்தவர்களாக விளங்கினார்கள்.சில சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி
இறைப்பொருளுடன் ஒன்றுவதையே ஒருவிதமான ரசவாதமாகப்
பயின்றனர். இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்', 'இன்பரசவாதம்', என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள். செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்
பொன்னான திருவம்பலவே.
என்று திருமூலர் கூறியிருக்கிறார்.
தூரத்தில் இருக்கும் மலையைக் கிட்டத்தில் தோன்றச் செய்து, கிட்டத்தில்
இருந்த மலையைத் தூரத்திற்குச் செல்லவைப்பது; ரொம்பவும் கிழட்டு
ஆசாமிகளை இளைஞர்கள் ஆக்குவது; குழந்தைகளாக இருக்கும் மக்களைக்
கிழடாக ஆக்குவது;
ஆணைப் பெண் வடிவிலும் பெண்ணை ஆண்வடிவிலும் தோன்றச்
செய்வது; மலடியைப் பிள்ளைபெறச் செய்தல்; அங்கவீனர்களுடைய
குறைகளைப் பலரும் காணும்போதே உடனே தீர்த்து அவர்களைச்
சீர்படுத்துவது; நாலு லோகத்தையும் பொன்னாக மாற்றுவது.
கையில் வைத்திருக்கும் மாத்திரைக்கோலை ஆகாயத்தில் வீசி எறிந்து,
அதை அப்படியே நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அதன்மேல் ஊசியை
நெட்டுக்குத்தலாய் நிறுத்தி, அந்த ஊசியின் முனைமேல் ஒரு காலின்
பெருவிரலை ஊன்றி அசைவின்று நின்று, அதன்பின்னர் அதே
ஊசிமுனைமீது தலைகீழாக நின்று பாதங்கள் மேலே வானில் மலர்ந்திட
அப்படியே சுழல்வது; பறந்து சென்று விண்ணில் தாவி மேகத்தைப் பிடித்து,
இடி தோன்றச்செய்து, அந்த மேகத்திலிருந்து குடிநீரைப் பிழிந்தெடுத்து
பார்ப்பவர்களெல்லாம் அதிசயம்போல் காட்டுவது....... இது போன்ற
சித்திகளைப் பற்றி ஏராளமான விபரங்களைப் பெரும் பெரும் சித்தர்கள் எழுதியுள்ளார்கள்.சித்தம் போக்கு சிவன்போக்கு என்பது முதுமொழி. அஃதாவது மனம் போன போக்கெல்லாம் போகக் கூடியவர் சிவபெருமான் என்பதல்ல இதன் கருத்து. சிவனுடைய போக்கு அன்பு நிலை. அதனாலேயேஅன்பே சிவம்என்றார். திருமூலரும்,


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்தி ருப்பாரே

என்கிறார்.

இவ்வன்பு நிலையை மையமாகக் கொண்டு இறைவனை நேசித்தவர்கள் சித்தர்கள். அதனால் சித்தர்கள் பின்பற்றிய வழி அன்பு நெறியாகும்.

கடவுள் வெளியில் இல்லை , நம் உள்ளத்திற்குள்ளே இருக்கின்றான் என்று கூறி வலியுறுத்தியவர்கள் சித்தர்கள்.
சித்தர்கள் மெய்யறிவினால் ஐம்புலனைக் காத்து வாழ்வதுதான் முக்தியாம் என்கின்றனர். ஐம்புலன்களின் உணர்வுகளை வழிமுறையோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருத்தல்பொறிவாயில் ஐந்து அவித்தல்என்றும், சிவநெறியைச் சார்கின்ற அறிவு பெற்று, வரும் வழியைத் தெரிந்து கொண்டால் அதன்பின் இந்த உடம்பு சாவை அடைவதில்லை என்றும், ஐந்து புலன்களின் அவாவைக் கட்டறுத்திருந்தால் இந்த உடம்புக்குச் சாவேயில்லை என்றும் கூறுகின்றனர்.
உடம்பினை முழுவதும் அழியாமல் காத்துக் கொள்ள முடியும். அதற்குவழி ஒன்றே தான். குண்டலி யோக சாதனையால் மூலதாரத்தினின்று எழுப்புகின்ற குண்டலினி சக்தியை நெற்றிக்கு நேராகச் சுழிமுனையிலே வியாபித்திருக்கும் ஞானாக்கினியைக் காண வேண்டும். அப்படிக் கண்டு விட்டால் உடம்பானது என்றைக்கும் அழியாதிருக்கும் என்று கூறி, இதுவே சாகாக் கலை அல்லது மரணமிலாப் பெருவாழ்வு என்கின்றனர். இச்சாகாக் கலையைப் பற்றிச் சித்தர்கள் விரிவாகக் கூறுகின்றார்கள்.
சித்த வைத்தியர்கள் அல்லது சித்தர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்டு நோயுடன் வருபவர்களின் கையின் நாடித் துடிப்பின் தன்மைகளை அறிந்து கொண்டு, நோயினை நீக்குவர். மலைகளிலிருந்து கொண்டு வரும் மூலிகைச் செடிகளின் இலைகளைப் பொடியாக்கியும், தைலமாகவும் தருவர். இம்மருந்து உடலில் மெதுவாகக் கரைந்து, இரத்தத்துடன் கலந்தபின் நோய் முற்றிலும் குணமாகி விடும். இதனால் எந்த விதமான பின் விளைவும் இருக்காது. தீராத வியாதிகளும், தீர்த்து வைத்திடும் வைத்தியம் சித்த வைத்தியம் ஆகும். இவ்வைத்தியத்தினை எல்லாச் சித்தர்களும் பின்பற்றியுள்ளனர். சித்தர்கள் பல்வேறு துறைகளைச் சார்ந்த இலக்கியங்களை, நூல்களை
படைத்துள்ளனர். மொழி நூல், யோகநூல் ; மந்திரம் ; தந்திரம் ; யந்திரம் ;மருத்துவ நூல் ; புவியியல் நூல் ; தாவரயியல் நூல் ; சோதிட நூல் ;கணித நூல் ; வானநூல் என தமிழுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

சில அனுவபங்களை படித்தால் புரியும் , சில கேட்டால் , சில நுகர்ந்தால், சிலவே உணர்ந்தால் புரியும். அத்தனை விதங்களிலும் , நிறைவாய் , சுகானுபவமாய் நமக்கு சாந்தமும் -இன்பமும் அளிப்பது சித்தர் இலக்கியம்.
மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தை எண்ணி பங்கம் போதாதேதங்க இடம் பாரப்பா….
இதுவே சித்தர்களின் கொள்கை. நலம் சிறக்க , நல்லன விளைக.                                                                வாழ்க வளமுடன் ...!