Tuesday, July 6, 2010

மானுடம் போற்றும் மனிதநேயம் வாழும் மகத்துவமிகு மாதா ட்ரஸ்ட்


"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர், நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்"
Image
உங்கள் திருமண நாள், உங்கள் குழந்தைகள்/பேரக்குழந்தைகளின் பிறந்த நாள் மற்றும் பாசம் மிகுந்த உங்கள் பெற்றோர்களின் நினவு நாட்கள், கொடிய புற்று நோயினால் உயிருக்குப் போராடும் ஏழை நோயாளிகளுக்கு, வயிறார உணவளித்து அவர்கள் வியாதிக்கு தரம் வாய்ந்த சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனையில் இலவசமாகவோ அல்லது குறைந்த செலவிலோ சிகிச்சை பெற உதவ நீங்கள் விரும்புகிறீர்களா?
நீங்கள் எங்கள் தர்மசாலாவிற்கு விஜயம் செய்து நேரில் பார்த்த பிறகு உங்கள் உதவிகள் இப்படி அளிக்கலாமே...
“புற்றுநோய்” - சரியான நேரத்தில் முறையான சிகிச்சையளித்தால் நிச்சயம் குணப்படுத்தலாம். புற்றுநோயால் அவதியுறும் ஏழைகள் குணமாக உதவி செய்ய, எங்களுக்கு உதவுங்கள் ஏழையின் சிரிப்பே இறவனின் கருணை!
நன்றே செய்க! அதை இன்றே செய்க!!
இது சான்றோர் வாக்கு.
இந்த சிறந்த சேவைக்கு ரூ.100,000 நிதி கொடுத்து, நீங்கள் ஒரு நிரந்தர காப்பாளர் ஆகலாம். இங்கு தங்கும் 250 முதல் 300 நோயாளிகளுக்கு ஒரு முழு நாள் உணவை ஆண்டுக்கு ஒருமுறை வழங்க ரூ.75,000 கொடுத்து நீங்கள் ஒரு வள்ளல் ஆகலாம். இந்த தொகை டிரஸ்டின் காப்பு நிதியில் சேர்க்கப்பட்டு, அதன் வட்டியிலிருந்து இந்த தர்மம் செய்யப்படும். ஒரு நாள் சாப்பாடு செலவின் ஒரு பகுதியான ரூ.8000 அளிக்கலாம். காலை/இரவு உணவுக்காக ரூ.3000 அல்லது சிற்றுண்டிக்கு ரூ.2000 தந்து உதவலாம். மாதம் ஒரு நோயாளிக்கு ஆதரவுக்கரம் நீட்ட ஒரு வருடத்திற்கு ரூ.1000 கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு நோயாளியின் உணவுக்காக ரூ.80 அளிக்கலாம்.
Image
Sri Matha Trust (Secular Charitable Institution for poor cancer patients)
Our free dormitory is a boon for the poor who are combating CANCER . We feel highly privileged to commission and manage this Dharmasala at the Divine command of His Holiness  Sri Jayendra Saraswathi Swamigal of Kanchi Kamakoti Peetam. Our present service to the suffering poor cancer patients
Our Trust commissioned a Dharmasala at the Old Cancer Institute at Adyar, Chennai during August 2000 at the behest of His Holiness. Here we are providing free food and shelter to poor cancer patients availing free treatment as out-patients at the World renowned Cancer Institute, Adyar, Chennai as per MOU signed by Sri Matha and our Trust with the said Hospital. So far more than 1,62,000 poor patients / their attendants have been provided with this facility. We manage the required expenses from and out of contributions from individual donors and other institutions only. Our selfless and sincere service for the past 10 years have been uniformly recognized and appreciated by His Holiness, the Cancer Institute, the print & visual media, donors, visitors and more whole heartedly, by the poor cancer patients themselves who are the direct beneficiaries.
His Holiness blesses Krishnamoorthy for his service to poor cancer patients and confers on him the title “Jana Seva Rathna” at His 75th Avatara Mahotsava function held at Mylapore, Chennai.
In our mission to serve the suffering poor cancer patients further as we complete 10 years of service, with your inspiring moral & financial support, we plan to construct and commission by Jan 2011 an exclusive free Dormitory for the  terminally - ill poor cancer patients in the land to be allotted by the Govt. of Tamilnadu behind Siddha Institute at Tambaram.
ஓரு பத்திரிகையின் விமர்சனம்
புற்று நோயாளிகளுக்கு இலவசக் குடில் பௌர்ணமி நாள்! தாய் தன் குழந்தைக்குச் சோறு ஊட்டிக்கொண்டு இருந்தாள். “நிலா நிலா இங்கே வா... ஆசை முத்தம் தா தா” குழந்தை நிலவைப் பார்த்த படியே அம்மாவைப் போல! ஆனால், அந்த அம்மாவின் கண்கள் குளமாயின. முதல் நிலைப் புற்றுநோயால் தன் குழந்தை பாதிக்கப்பட்டு இருக்கிறதே என்ற கவலை! அத்துடன் இந்த வியாதி பீடித்திருக்கிற வேளையில் பலம் கொடுக்க, உணவு, ஊட்டப் பொருட்கள் வாங்க வசதி இல்லையே என்ற ஏக்கம்! அம்மாவின் கண்களில் வழிந்த நீர் குழந்தையையே நனைத்து விடுகிறது.
போன மாசம் போனமாதிரி நாளக்குத் தான் மெட்ராஸ் போகப்போகிறோமே. அடயாறு மாதா டிரஸ்ட் உம்மாச்சியப் பார்க்கப் போறோமே! இன்னிக்கு வயிறு நிறையாட்டி என்னம்மா? நாளைக்கு வயிறு நிறையும்மா...” பத்து வயதுக் குழந்தை படபடத்தபோது தன்னைத் தேற்றிக் கொண்டாள் அந்த தாய்.
முழுப் பௌர்ணமி நிலவாய் அப்பழுக்கற்றவராய் மாதா டிரஸ்டின் டிரஸ்டி திரு.வி.கிருஷ்ணமூர்த்தி நிற்கிறார். நெற்றி நிறைய விபூதியும், குங்குமமும் சுமந்தபடி வெள்ளைச் சட்டை, காவி வேஷ்டியில் இவரைப் பார்க்கிற ஒவ்வொரு நோயாளியும் ஏதோ ஒரு தெய்வத்தைப் பார்த்தவர்களைப் போலப் பரவசமடைகிறார்கள். மேலே சொன்னவை ஒரு எழுத்தாளனின் கற்பனை வரிகள் அல்ல. நிஜமான தரிசனம். தானத்திலே சிறந்த தானம் அன்னதானம் என்பார்கள். அதுவும் வாழ்க்கையில் மிகவும் சோதனை மிகுந்த நாட்களை அனுபவிக்கும் புற்று நோயாளிகளுக்கும் அவர்களோடு தங்கியிருக்கும் உறவினர்களுக்கும் இவர் செய்யும் அன்னதானம் சிறந்தது மட்டுமல்ல, கோடி கோடிப் புண்ணியமும்கூட. இந்தப் புனிதக் காரியத்தில் நீங்களும் பங்கு எடுத்க்துக் கொள்ளவேண்டும். உங்களால் இயன்றதை, உங்கள் நண்பர்களால் இயன்றதை இவருக்குப் பொருளுதவியாக அனுப்பி வயுங்கள்.
தாம்பிரவருணி (ஆசிரியர்)   
ஸ்ரீ மாதா டிரஸ்ட்
தற்போதைய சேவாஸ்ரீ மாதா டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் அடையாறு புற்றுநோய் மருத்துவனை வளாகத்தில், ஒரு தர்மசாலாவை ஆகஸ்ட் 2000 முதல்  நடத்தி வருகிறோம். இங்கு நாங்கள் முதற்கட்ட நிலையில் இருக்கும் புற்று நோயாளிகளுக்கு இலவசமாக உண்ண உணவும், இருக்க இடமும் அளிக்கிறோம். இவர்களுக்கு உலகப்புகழ் பெற்ற அடையார் புற்றுநோய் மருத்துவமனயில் இலவசமாக சிகிச்சையளிக்கப்படுகிறது. இதுவரை எங்கள் தர்மசாலாவில் 1,62,000-க்கும் மேற்பட்ட ஏழை நோயாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் பயன் அடந்துள்ளனர். எங்கள் 10 ஆண்டு நிறைவையொட்டி மனிதநேய பணியின் விஸ்தரிப்பு, எங்கள் அடுத்த இலக்காக இறுதிக்கட்ட நிலையிலிருக்கும் ஏழை புற்று நோயாளிகளுக்கு தமிழக அரசு தாம்பரத்தில் எங்களுக்கு அளிக்கவிருக்கும் இடத்தில் ஒரு தர்மசாலாவை நிறுவி, அங்கு அவர்களுக்கு உணவு, இருப்பிடம் மற்றும் தேவையான மருத்துவ உதவி அனைத்தும் இலவசமாக அளிக்க உள்ளோம். அவர்களுக்கு வலியற்ற, பசியற்ற, அமைதியான உறக்கத்தை எதிர்கொள்ள வழி வகை செய்வோம். தேவையெனில் அவர்கள் இறுதி அடக்கத்தைக் கூட அவரவர்களின் வழக்கப்படி நாங்கள் செய்ய எண்ணி உள்ளோம்.
FOR YOUR FAVOURABLE RESPONSE
From :                                 Date : ........................ Contact No : ....................................
To,V.Krishnamoorthy“Sri Matha Trust”
Rajasthani Dharmasala, 
Old Cancer Institute Premises, 
Gandhi Nagar, Adyar, Chennai - 600 020.I
In response to your appeal for contribution for maintenance of Dharmasala for poor cancer patients. I am donating Rs............................ towards feeding an average of 250 to 300 inmates on any day. 
Contribution of Rs.1,00,000/- to become your life time “PATRON” 
Contribution of Rs.75,000/- to become your “DONOR”
Contribution of Rs.8,000/- to be a “CO-SPONSOR” for a day 
Contribution of Rs.3,000/- for lunch / dinner or Rs.2,000/- towards breakfast as a “CO-SPONSOR”
Contribution of Rs.1000/- to adopt one patient for one day every month for one year.
Contribution of Rs. .................. for this noble cause.
My Cheque / Demand Draft No. ................................... dated ....................... for Rs. .............  drawn in the name of “Sri Matha Trust” on................is enclosed. 

Kindly issue your stamped receipt and IT exemption certificate. 
Sincerely yours
மற்றுமொரு பத்திரிகயின் விமர்சனம்
மரணத்தை வெல்லும் மாபெரும் பணி புற்றுநோய்க்குச் சிகிச்சையளிப்பது. இந்தச் சேவையை ஒரு புனிதப் பணியாக ஆற்றி வரும் பத்மபூஷன் டாக்டர் வி.சாந்தா அவர்கள் (அடையாறு புற்றுநோய் மருத்துவமனை செயல் தலைவர்) காஞ்சி காமகோடி பீடாதிபதி பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் இந்த தர்மசாலாவப் பராமரிக்க ஒரு நிறுவனத்தை ஏற்படுத்தும்படி வேண்டுகோள் விடுத்தார். பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகளும் பரமகருணையுடன், நேர்மையிலும், ஒழுக்கத்திலும் பக்தியிலும் சிறந்த திரு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் இந்நிறுவனத்தை ஒப்படைத்தார். அந்த அமைப்பிற்கு ஸ்ரீ மாதா டிரஸ்ட் என்று பெயரையும் அருளி, தனது உடனடி நன் கொடையாக ஒரு லட்சம் ரூபாயும் அளித்து ஆசீர்வதித்தார். ஜாதி, மதம், இனம் என்று எவ்வித பேதமுமின்றி அனைத்துப் புற்றுநோயாளிகளுக்கும் இலவசமாகத் தங்குவதற்கு இடமும், உணவும், சிகிச்சக்கு உதவியும் அளிப்பது இந்த ஸ்ரீ மாதா டிரஸ்டின் உன்னத நோக்கங்களாகும். இந்தப்புண்ணிய கைங்கர்யத்தை அளவற்ற ஈடுபாடு, சிரத்தை ஆகியவற்றுடன் அன்று முதல் ஒரு தெய்வீகப் பணியாக ஏற்று நிர்வகித்து வருகிறார் திரு.வி.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்! இத்தகைய ஈடிணையற்ற தொண்டு நிறுவனத்தை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. அங்கு தங்கியுள்ள பல நோயாளிகளை நேரில் பார்த்துப் பேசும் வாய்ப்பையும் பெற்றேன். அடியோடு நம்பிக்கையை இழந்து, மிகக்கொடிய சிகிச்கை முறைகளைத் தாங்கிக் கொண்டு, தாங்கள் அன்பும், பாசமும் வைத்த உறவினர்களிடமிருந்து பிரிந்து வந்து இக்காப்பகத்தில் இருக்கும்போது, அவர்கள் வேதனையைக் குறைப்பதற்காக திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒவ்வொருவரிடமும் இதமாகப் பேசி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிய திறனைக்கண்டு பிரமித்தேன். பிறர் துன்பமும் நமதே என, சுயநலம் மிகுந்த இவ்வுலகில் ஒவ்வொரு விநாடியும் தாங்குவதற்கு கடினமான புற்றுநோயினால் அவதியுறும் துர்பாக்கியசாலிகளுக்காகத் தனது நேரத்தையும், காலத்தையும் ஊண், உறக்கமின்றிச் செலவிடும் இந்த உத்தமரை நினைக்கும்போது என் நெஞ்சம் நெகிழ்கிறது.
Image
அன்போடு இலவசமாக இருக்க இடமும், உண்ண உணவும், சிகிச்சைக்கு உதவியும், அனைத்திற்கும் மேலாக மனோபலத்தையும் அளித்து வரும் ஸ்ரீ மாதா டிரஸ்ட் நிறுவனத்திற்கு அனைத்து மக்களும் அவரவர் சக்திகளுக்கேற்றவாறு உதவ வேண்டுகிறோம். கணக்கிட இயலாத புண்ணிய பலனை அளிக்கும் கைங்கர்யம் இது!
என்றும் அன்புடன் உங்கள் ஏ.எம்.ஆர்.ஆசிரியர்
FROM OUR VISITORS BOOK
இந்தப் புனிதமான இடத்திற்கு வந்ததும் இராம கைங்கர்யத்திற்கு வந்து நின்ற அணிலாக உணர்கிறோம்.
SSR. Rajkumar, IIIrd Main Road, R.K.Nagar, Chennai-40.
Working for noble cause. Excellent social service. Free food and stay for cancer patients for more than one lakh beneficiaries. Well done! Keep it up!
S.Ve.ShekherM.L.A., Mylapore.
மாதா என்ற பொருளுக்கு ஏற்றாற்போல, தாயைப் போல் சேவை செய்யும் இத்தொண்டு நிறுவனத்தைப் பாராட்ட இனிதான் (இனிதான) வார்த்தைகளைத் தேடவேண்டும். கருணையே உருவான “கண்ணன்” அன்று கோவர்த்தன கிரிதாரியாக இருந்த அனைத்து உயிர்களையும் காத்து ரட்சித்தார். இன்று ஐயா தாங்கள் இந்த ஸ்ரீ மாதா டிரஸ்ட் மூலம் பல ஏழை புற்று நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுகிறீர்கள். நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. ஒருவருக்கொருவர் உதவி புரிந்து வாழ்வதற்கே இவ்வுலகில் யாரும் இல்லை. ஒருவருக்கொருவர் உதவும் எண்ணத்தில் இருந்தால் இவ்வுலகில் எந்த நோயையும் எதிர்த்து வாழலாம். 

தமிழ்ச்செல்வி குலோத்துங்கன், வண்ணாந்துறை, அடையாறு, சென்னை
தினமும் ஓர் உயிர்க்கு நல்லது செய்தால் எப்போதும் “ராஜா”வாக இருக்கலாம் என்று அம்மா சொல்வார்கள். கிருஷ்ணமூர்த்தி ஐயா தினமும் நூற்றுக்கணக்கான பேருக்கு நல்லதைச் செய்கிறார்.
 
அவர் “சக்கரவர்த்தி”பாலம். கல்யாணசுந்தரம் அன்பு பாலம்.
Shri Krishnamoorthy is doing amazing services to the society with the grace of his Guru. Great service indeed.
N.Ramasharma, Manager
Sri Kanchi Kamakoti Peetam
Kanchipuram
தாங்கள் ஒருமுறை எங்கள் தர்மசாலாவிற்கு விஜயம் செய்து எங்கள் சேவயை நேரில் கண்டபின், தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துக்கூறவும்.
நீங்கள் உதவிகளை அளிக்க விரும்பினால் Sri Matha Trust என்ற பெயரில் காசோலையாக கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
ஸ்ரீ மாதா டிரஸ்ட், ராஜஸ்தானி தர்மசாலா, பழைய கேன்சர் இன்ஸ்டிட்யூட் வளாகம், ஈஸ்ட் கனால் பேங்க் ரோடு, காந்தி நகர், அடையாறு, சென்ன - 600 020. 
தொலைபேசி : +91 44 2442 0727 / +91 44 2440 4950
வி.கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கைப்பேசி : +91 94440 01065 / +91 95000 01065, நிர்வாக அலுவலகம் : ஸ்ரீ மாதா டிரஸ்ட், “குரு கிருபா”, 3, சாஸ்தா அவென்யூ, திருமழிசை தெரு, சுந்தரம் காலனி, கிழக்கு தாம்பரம், சென்னை - 600 059.
நீங்கள் அளிக்கும் தர்மத்திற்கு 80 (G) பிரிவின்படி வருமான வரி விலக்கு கிடைக்கும்
To extend your assistance, kindly contact
Sri Kamatchi Mani : +91 93848 33325 Ln.N.Shanckaram : +91 93848 20727 S.Rama : +91 93810 20727, A.American : +91 90032 47857
உங்களுக்குத் தெரியுமா?
புற்று நோயாளிகளும் கண் தானம் செய்யலாம். இந்த மனிதாபிமான செயலைச் செய்ய விரும்பினால் தகுந்த மருத்துவரை ஆலோசிக்கவும்.
No blanket ban for eligibility to donate “Eyes” even for cancer patients
மற்றொரு பத்திரிகையின் விமர்சனம்
அவர்கள் கண்ணீரைத் துடையுங்கள். கேன்சர் எனப்படும் புற்றுநோயின் கொடுமையை எடுத்துக் கூற வார்த்தைகளில்லை. கேன்சருக்கு ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடில்லை. ஏன் வருகிறது, எப்படி வருகிறது, தீர்க்க மருந்து இருக்கிறதா? என்றெல்லாம் உலக மருத்துவ மேதைகள் இன்று வரை முடிவில்லாமல் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். வெளியூரிலிருந்து சென்னையில் சிகிச்சை பெற வந்து சேரும் பணமில்லாதவர்கள், பரம ஏழைகள், தாங்கள் அழைத்து வந்த நோயாளியை மருத்தவமனையில் சேர்த்து விட்டு எங்கே தங்குவார்கள்? உணவுக்கு என்ன செய்வார்கள்?
 
ராஜஸ்தானி அசோசியேசன், அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூடிற்காக கட்டடம் ஒன்று கட்டிக்கொடுத்தார்கள், கட்டடம் வந்தாச்சு. அதை, அந்த தர்ம சாலையப் பராமரிக்க வேண்டுமே? இந்த ஸ்தாபனத்தினர் காஞ்சி பெரியவர்கள் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை அணுகி வேண்டுகோள் விடுத்தார்கள். "தர்ம சிந்தனை, உழைக்கத் தயங்காதவர், நிதி சேகரித்துத் தூய்மையாகப் பரிபாலனம் செய்பவரை ஸ்ரீ ஆச்சார்யார் கண்டறிந்தார்."
 வி.கிருஷ்ணமூர்த்தியிடம் அந்தப் பெரும் பொறுப்பை ஒப்படைத்தார். ஸ்ரீ பெரியவர்களின் அருளாசியுடன் “ஸ்ரீ மாதா டிரஸ்ட்” என்ற புனிதமான பெயருடன் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்து திருப்பதி வேங்கடவன் சந்நிதானத்தில் அதைத் தொடங்கினார். புனிதமான பெயர் அமைந்து விட்டது. இந்த டிரஸ்டின் சமயலறை ஒரு நாள், ஒரு வேளை கூட மூடப்படாமல் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை 2000-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் எல்லா நாட்களிலும் தொடர்ந்து இயங்கி வருகிறது. “நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்” என்று பாரதியார் கல்விச் சேவைக்குக் கூறியதை மாதா டிரஸ்டுக்கு உதவுவதற்கும் கூறலாம். இதுவரை தொய்வின்றி, சலிப்பின்றி வி.கிருஷ்ணமூர்த்தி, மாதா டிரஸ்டிற்காக அலைந்து, திரிந்து செய்து வரும் சேவையைப் பார்க்கும்போது 'இலக்கிய பீடம்' அவருக்கு ஏதாவது உதவவேண்டும் என்ற முடிவுடன்தான் இந்த வேண்டுகோளை எழுகிறேன். சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவ மனைக்கு புறநோயாளிகளாக வரும் ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கும், உடன் வரும் உதவியாளர்களுக்கும் இலவச இடமும் உணவும் நாள்தோறும் தருவதற்கு, “ஸ்ரீ மாதா டிரஸ்டிற்கு” பணம் அருவிபோல்  கொட்ட வேண்டும்.
 
கலைமாமணி விக்கிரமன் - ஆசிரியர்

No comments:

Post a Comment